பிரான்ஸில் பொதுநல செலவீனங்களில் புதிய வெட்டுக்கள்

Report Print Thayalan Thayalan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஐரோப்பிய ஒன்றிய வரம்பிற்கு கீழாக பத்தாண்டுகளாக அதிகமாகவுள்ள துண்டு விழும் தொகையை கொண்டு வருவதற்கு புதிய பிரான்ஸ் அரசாங்கம் பொதுநலச் செலவீனங்களில் வெட்டுக்களை அறிவித்துள்ளது.

முக்கியமாக பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவுத்துறை, போக்குவரத்து ஆகியவற்றிலிருந்து 4.5 பில்லியன் யூரோக்கள் வெட்டை மேற்கொள்ளவுள்ளது.

advertisement

இந்த வெட்டுக்களால் செலவுகளின் கணிப்பு 322 பில்லியன் யூரோக்களாக 2017 இல் வீழ்ச்சியடையும்.

ஆனால் அரசாங்க சேவைகளோ அல்லது வரிகளோ இதனால் பாதிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அவருடைய பிரச்சார உறுதிமொழிகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றிய உறுதிப்பாட்டு உடன்படிக்கை வரவு செலவுத் திட்ட விதிகளுக்கமைய இருக்கவேண்டும் என்பதற்காக இந்த வெட்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

துண்டு விழும் தொகை, வெளியீடுகளில் 3% ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது என்பதே ஐரோப்பிய ஒன்றிய உறுதிப்பாட்டு உடன்படிக்கை வரவு செலவுத் திட்ட விதியாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments