அவல நிலையில் அகதிகள் முகாம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் அகதிகள் முகாம்கள் அனைத்தும் அவல நிலையில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பிரான்சில் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள அகதிகள் முகாம்கள் அனைத்தும் அவல நிலையில் இருப்பதாகவும், போதிய வசதிகள் செய்து தருவதில் அரசு கடும் மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மேயர் ஒருவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் குறித்த குற்றச்சாட்டினை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் அடைக்கலம் கோருவோருக்கு உடனடியாக உரிய பதிலை அளிக்க அரசு ஆவன செய்யும் எனவும், அகதிகளுக்கென் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தவும் புதிதாக குடியிருப்புகளை உருவாக்கவும் அரசு முன்னுரிமை அளிக்கும் எனவும் பிரதமர் Edouard Philippe தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டில் மட்டும் பிரான்சிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்கள் 85,000 என தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி தற்போதுள்ள நிலையில் 40 விழுக்காடு அகதிகளுக்கு போதிய குடியிருப்பு வசதி இல்லை எனவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 12,500 குடியிருப்புகளை உருவாக்க அரசு ஆவன செய்யும் என Edouard Philippe உறுதி அளித்துள்ளார்.

மேலும் புகலிடம் கோரும் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் பிரான்ஸ் இல்லை எனவும் இருப்பினும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments