பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியின் அழகை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் அவரது மனைவியின் அழகை அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் வர்ணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1789-ம் ஆண்டு நிகழ்ந்த பிரான்ஸ் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் யூலை 14-ம் திகதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்கமாறு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டொனால்ட் ட்டிரம் பாரீஸில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் நேற்று பேசியுள்ளார்.

அப்போது, இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் அவரது மனைவியான பிரிஜ்ஜிட் மேக்ரானின் அழகை டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.

பிரிஜ்ஜிட்டை பார்த்து ‘உங்களது உடல் கவர்ச்சியான கட்டமைப்புடன் உள்ளது’ எனக் கூறிவிட்டு இம்மானுவேல் மேக்ரானை நோக்கி ‘உங்கள் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்’ எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் பேசிய இவ்வார்த்தைகள் கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

இம்மானுவேல் மேக்ரானை விட அவரது மனைவி 15 வயது மூத்தவராக உள்ளதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது அழகை டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments