டொனால்ட் டிரம்பிற்கு ஈபிள் கோபுரத்தில் விருந்து அளித்த பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் நாட்டிற்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் விருந்து வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் யூலை 14-ம் திகதி நாடு முழுவதும் கோலாகலமாக விழாக்கள் நடைபெறும்.

தலைநகரான பாரீஸில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவியான மெலினியா பங்கேற்றுள்ளனர்.

டொனால்ட் டிரம்பை வரவேற்ற பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற இடங்களை சுற்றிக்காட்டியுள்ளார்.

இதன் ஒருப் பகுதியாக உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தில் டொனால்ட் டிரம்பிற்கும் அவரது மனைவிக்கும் விருந்து வழங்கப்பட்டது.

ஈபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் Jules Verne என்ற உயர் ரக உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த உணவகத்தில் தான் இருவருக்கும் இம்மானுவேல் மேக்ரான் விருந்து அளித்துள்ளார்.

ஈபிள் கோபுரத்தில் அமர்ந்து இரு நாட்டு ஜனாதிபதிகளும் அவரது துணைவியரும் விருந்து சாப்பிடும் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக, பாரீஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இம்மானுவேல் மேக்ரனின் மனைவியான பிரிஜ்ஜெட்டை பார்த்து ‘உங்களது உடல் நல்ல கட்டமைப்புடன் உள்ளது’ என டொனால்ட் டிரம்ப் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments