நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை: பிரான்ஸ் ஆய்வாளர்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பாரிஸைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவரும், இந்திய தேசிய இராணுவத்தை கட்டமைத்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திர ஜப்பானுக்கு செல்லும் வழியில் தைவானில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இது தொடர்பாக மத்திய அரசு விசாரணைக் குழு அமைத்தது.

விசாரணைக் குழு அமைத்த மூன்று குழுக்களில் இரண்டு குழுக்கள் சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாகவும், ஒரு குழு மட்டும் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான ஜே.பி.பி.மோரே, நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் பிரான்ஸ் தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து தனக்கு ஒரு ஆவணம் கிடைத்துள்ளதாகவும், அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments