பிரான்ஸ் ஜனாதிபதிக்கும் ராணுவ தளபதிக்கும் இடையே மோதல்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கும் அந்நாட்டு ராணுவ தளபதிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சரான Gerald Darmanin கடந்த 11-ம் திகதி ஜனாதிபதி மேக்ரானுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது, பொருளாதாரத்தை மேம்படுத்த செலவுகளை குறைக்க வேண்டும் என நிதி அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மேக்ரான், ‘செலவுகளை குறைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு துறையிலும் இதனை செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சகத்திற்காக ஆயுதங்கள் வாங்க செலவிடப்படும் நிதியில் சுமார் 850 மில்லியன் யூரோவை குறைக்க வேண்டும் என மேக்ரான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இத்தகவல் வெளியானதை தொடர்ந்து, 12-ம் திகதி ராணுவ தளபதியான Pierre de Villiers என்பவர் ஜனாதிபதியின் முடிவை கடுமையாக எதிர்த்துள்ளார்.

‘ராணுவத்திற்காக செலவிடப்படும் நிதியை குறைக்க நான் அனுமதிக்க மாட்டேன்’ என ராணுவ தளபதி பகிரங்கமாக பதலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ம் திகதி பிரான்ஸ் புரட்சி நினைவு நாளை கொண்டாடும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் பிரான்ஸ் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார்.

அப்போது, பாரீஸில் நிகழ்ந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேக்ரான் ‘சில விடயங்களை பொது இடத்தில் பேச முடியாது’ என ராணுவ தளபதி கூறியதை மனதில் வைத்துக்கொண்டு பேசியுள்ளார்.

ஆனால், சில மணி நேரத்த்திற்கு பின்னர் ராணுவ அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை செய்தபோது ‘நான் உங்கள் அனைவருக்கும் தலைவர். என் உத்தரவை நீங்கள் பின்பற்ற வேண்டும்’ எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதே சமயம், 14-ம் திகதி நிகழ்ந்த ராணுவ ஊர்வலத்தில் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் ராணுவ தளபதி Pierre de Villiers ஆகிய இருவரும் ஒன்றாக கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘அரசாங்க தலைவரின் உத்தரவை பின்பற்றாதவர்கள் விரைவில் மாற்றப்படுவார்கள்’ என ஜனாதிபதி மேக்ரான் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இதன் மூலம், ராணுவ தளபதி விரைவில் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்யப்படுவார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ராணுவ தளபதி ராஜினாமா செய்தால், ஜனாதிபதி பதவியேற்று இரண்டு மாதத்தில் இச்சம்பவம் அவருக்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும்.

அதே சமயம், ஜனாதிபதியின் கட்டளையை பின்பற்றாத ராணுவ தளபதியை பதவியில் தொடர்ந்து நீடிக்க வைத்தால் அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என முன்னாள் ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments