அகதிகள் விடயத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி எடுத்த முக்கிய முடிவு: மக்கள் கடும் எதிர்ப்பு

Report Print Raju Raju in பிரான்ஸ்
1599Shares
1599Shares
lankasrimarket.com

பிரான்ஸ்க்கு வரும் அகதிகள் சாலையில் தங்குவதை தடுக்க ஜனாதிபதி மேக்ரான் முக்கிய முடிவு எடுத்துள்ள நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரான்ஸ்க்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அடைக்கலம் தேடி வருகிறார்கள்.

அப்படி வரும் மக்களில் பலருக்கு தங்க இடம் கிடைக்காமல் சாலையிலேயே தங்குகிறார்கள். அதிலும் முக்கியமாக Calais நகரில் கடந்த வருடம் இறுதியில் அதிக அகதிகள் தங்கியிருந்த jungle குடியேற்ற முகாம் திடீரென மூடப்பட்டது.

இதையடுத்து அங்கு தங்கிருந்த மக்கள் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டு தங்க இடம் கிடைக்காமல் சாலையிலேயே தங்கி வருகிறார்கள்.

இது போல பிரான்ஸின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் சாலையில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு தங்க இடம் கொடுக்க முடிவு செய்த இம்மானுவேல் மேக்ரான் அரசு, பிரான்ஸில் பல பகுதிகளில் மொத்தம் 62 ஹொட்டல்களை விலைக்கு வாங்கியுள்ளது.

இதில் வீடுகள் இல்லாமல் சாலையில் வசிக்கும் 6000 அகதிகளை தங்க வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு பிரான்ஸ் மக்களும் அதிகாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் Semeac பகுதியில் 5000 வீடுகள் உள்ளது.

இங்கு வாழும் மக்கள் அகதிகள் தங்கள் பகுதிக்குள் நுழைய கூடாது என பெரிய சுவரை கட்டியுள்ளனர்.

அங்கு வசிக்கும் Laurent Teixeira கூறுகையில், நாங்கள் அகதிகளுக்கும், குடிபெயர்பவர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் குடிமக்களாகிய எங்களின் பேச்சையும் அரசு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

Bailleul பகுதியின் பொலிஸ் சங்கம் தெரிவிக்கையில் மேக்ரான் அரசின் இந்த திட்டம் முட்டாள்தனமானது.

Calais அருகில் அரசு வாங்கியுள்ள ஹொட்டலில் அகதிகள் தங்க வைக்கப்பட்டால் அங்கிருந்து லொறிகளை திருடி கொண்டு பிரித்தானியாவுக்கு அவர்கள் செல்வார்கள் என கூறியுள்ளது.

ஆண்களும், பெண்களும் சாலையில் தங்குவதை தான் விரும்பவில்லை எனவும், எல்லா இடங்களிலும் அவர்களுக்கு அவசர முகாம்கள் அமைக்க வேண்டும் எனவும் மேக்ரான் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்