பிரான்ஸ் மலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகள்: 50 வருடத்துக்கு முந்தையதா?

Report Print Raju Raju in பிரான்ஸ்
269Shares
269Shares
lankasrimarket.com

பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உறைந்த நிலையில் உடல் உறுப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், விமான விபத்தில் இறந்தவரின் உடலாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது மோண்ட் பிளான்க் சிகரம். இது மலைத்தொடரின் மிக உயரமான சிகரமாகும்.

பிரான்ஸில் அமைந்துள்ள இந்த சிகரத்தில் கடந்த 1950-ம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.

அதே போல கடந்த 1966ல் போயிங் 70 ரக ஏர் இந்தியா விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது, இதில் 117 பயணிகள் பலியானார்கள்.

இந்த விபத்துக்கள் குறித்து பிரான்ஸை சேர்ந்த டேனியல் ரோச் என்ற நபர் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார்.

இந்நிலையில், தனது தேடுதல் வேட்டையின் போது அப்பகுதியில் உறைந்த மனித உறுப்புகளை டேனியல் கண்டுபிடித்துள்ளார்.

அந்த மனித உறுப்புகள் 1966ம் ஆண்டு விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த பெண் பயணியின் உறுப்புகளாக இருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார்.

மேலும் அப்பகுதியில் ஜெட் விமான என்ஜினையும் டேனியல் கண்டுபிடித்துள்ளார். டேனியல் கண்டுபிடித்த விடயங்கள் பரிசோதனைக்காக தற்போது எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்