விமான நிலையத்தில் பயணியை தாக்கிய விமான ஊழியர்: கையில் குழந்தை இருந்தும் அத்துமீறல்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் விமான நிலையத்தில் பயணி ஒருவரை விமான நிலைய ஊழியர் ஒருவர் தாக்கியதால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நைஸ் விமானநிலையத்திலிருந்து லண்டன் செல்வதற்காக சகபயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளனர்.

அப்போது விமானம் வருவதற்கு காலதாமதமாகியுள்ளது. இதனால் பயணிகளில் ஒருவர் இது தொடர்பாக அங்கிருக்கும் ஊழியரிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவரை திடீரென்று ஊழியரை தாக்கியதுடன், எளனமாய் சிரித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அருகில் இருந்த பயணிகள் ஊழியரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து விமானநிலையத்தில் இருந்த Arabella Arkwright என்ற பயணி கூறுகையில், திடீரென்று அந்த ஊழியர் இவரைத் தாக்கிவிட்டதாகவும், இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்து தடுக்கப் போனதாகவும், தடுக்க சென்றவர்கள் சிலருக்கு அடி விழுந்ததாகவும் கூறினார்.

அப்போது அவர் தன் கையில் 9 மாத குழந்தையை வைத்திருந்ததாகவும் கூறினார்.

இது குறித்து விமானநிலையம் சார்பில் தெரிவிக்கையில், அந்த ஊழியர் தங்களுடைய ஊழியர் இல்லை என்றும் அப்புகைப்படத்தை பார்க்கும் போது, அவர் கண்டிப்பாக எங்கள் ஊழியர் இருக்க முடியாது, விமானநிலையத்திற்கு ஏஜெண்ட் மூலமாக வேலை பார்க்க வந்த நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் விமானம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்க வேண்டும் என்றும், சிறு தொழில்நுட்ப காரணமாக விமானம் தாமதமாக வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

விமானம் 13 மணி நேரம் தாமதத்திற்கு பின்னர் லண்டன் சென்றடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்