பாரிஸில் தாக்குதல்! தாக்குதல்தாரி தப்பியோட்டம் - ஆறு பேர் படுகாயம்

Report Print Vethu Vethu in பிரான்ஸ்
2052Shares
2052Shares
lankasrimarket.com

பிரான்ஸில் தலைநகர் பாரில் அதிநவீன கார் ஒன்று மோதியதில் ஆறு பாதுகாப்பு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

வேண்டும் என்றே BMW மோட்டார் கார் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய காரின் சாரதியை பொலிஸார் தேடி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரான்ஸின் Levallois - Perret பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

6 படை வீரர்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிர நிலையில் உள்ளதாகவும், ஏனைய நால்வரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

BMW கார் வேண்டும் என்றே வீரர்கள் மீது மோதியுள்ளதென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என Levallois-Perret மேயர் அந்த நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அந்த வாகனம் சம்பவ இடத்தில் முன்னரே நிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் படைவீரர்களுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விபத்திற்கும் சுற்றியுள்ள சூழலும் குறித்தும் தகவல்கள் தெளிவாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோதிய வாகனத்தை தேடுவதற்காக பிரான்ஸ் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த பகுதியில் ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த படையினர் குறித்த பகுதிக்கு நன்கு பழக்கமானவர்களாகும்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சார்லி ஹெப்டோ தாக்குதல்களை தொடர்ந்து, பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கும் நோக்குடன் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே இன்று வேணும் என்றே மேற்கொண்ட மோதல் சம்பவமானது பயங்கரவாத தாக்குதல்களாக இருக்கலாம் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்