பாரிஸ் பேக்கரியில் துப்பாக்கி சூடு: உரிமையாளர் கைது

Report Print Basu in பிரான்ஸ்
222Shares
222Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் தனது கடைக்கு வந்த வாடிக்கையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸில் உள்ள பேக்கரியிலே இத்துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கி குண்டு கையில் தாக்கியதில் பலத்த காயமடைந்த வாடிக்கையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து தலைமறைவான பேக்கரி உரிமையாளரை கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் பேக்கரி கடை தற்காலிகமாக முடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது பேக்கரியில் இருந்த நபர் கூறியதாவது, திடீரென அலறும் சத்தம் கேட்டது. அப்போது, கத்திக்கொண்டே பேக்கரியிலிருந்து நபர் ஒருவர் ஓடி வந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த பேக்கரி உரிமையாளர் அவரை துப்பாக்கியால் சுட்டார், இதில் காயமடைந்த நபர் நிலைகுலைந்து விழுந்தார் என தெரிவித்துள்ளார்.

உரிமையாளரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த காபியை கொடுக்க நேரமானதால் வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாகவே துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்