குழந்தையை கடத்திய இளம்பெண்: ஹெலிகொப்டரில் துரத்தி பிடித்த பொலிஸ்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
293Shares
293Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் பச்சிளம் குழந்தையை கடத்திய இளம்பெண்ணை பொலிசார் ஹெலிகொப்டரில் துரத்தி கைது செய்துள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் 35 வயதான தாயார் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் Potsdam நகரில் ஷொப்பிங் சென்றுள்ளார்.

அப்போது, பொருட்களை வாங்கியதும் குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்ப சிரமப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ட 19 வயதான இளம்பெண் ஒருவர் ‘குழந்தையை என்னிடம் கொடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என கணிவுடன் பேசியுள்ளார்.

இளம்பெண்ணை நம்பிய தாயார் தனது 4 மாத பெண் குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் பொருட்களை கொண்டு சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர், வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது குழந்தையையும் அப்பெண்ணையும் காணாதது கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பொலிசாருக்கு உடனடியாக தகவல் அளித்ததை தொடர்ந்து தனிப்படை அமைத்து ஹெலிகொப்டரில் இளம்பெண்ணை தேடியுள்ளனர்.

பல மணிநேர தேடலுக்கு பின்னர் 250 கி.மீ தொலைவில் உள்ள ஹேன்னோவர் நகரில் இளம்பெண் உள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக விரைந்து சென்று இளம்பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்தியதற்கு காரணம் இதுவரை தெரியவராத நிலையில் பொலிசார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்