பிரான்சில் மக்கள் மீது மோதிய கார்..தீவிரவாத தாக்குதலா? பொலிசார் விளக்கம்

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது கார் மோதிய சம்பவம், தீவிரவாத தாக்குதல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் கூட்டமாக இருக்கும் பொதுமக்கள் மீது வாகனங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அண்மையில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் வேனை மோத விட்டு தாக்குதல் நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் மார்ஸைல் நகரில் நேற்று பேருந்து நிறுத்தத்தில் உள்ள மக்கள் மீது கார் ஒன்று மோதி ஒருவர் உயிரிழந்தார் மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுனரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் விபத்து நடந்த பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் இது தற்செயலாக நடந்த விபத்துதான் என்றும் தீவிரவாத தாக்குதல் இதில் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்