ஆயுதங்களுடன் சாலையில் சண்டை போட்ட அகதிகள்: பொலிசார் செய்த செயல்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

தடி மற்றும் இரும்பு கம்பிகளுடன் சாலையில் சண்டை போட்ட அகதிகளை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரான்ஸின் Calais நகரில் நேற்று 200 அகதிகள் இரு பிரிவாக பிரிந்து தடி மற்றும் இரும்பு கம்பிகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சண்டை போட்டனர்.

ஆப்கானிஸ்தான் அகதிகளும், ஆப்பிரிக்க நாடான Eritrea அகதிகளும் இதில் ஈடுபட்டனர், போக்குவரத்து நிறைந்த சாலையில் சண்டை நடந்ததால் டிராபிக் அதிகளவில் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைத்தனர், இதில் 21 அகதிகள் மற்றும் 6 பொலிசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Getty Images

சம்பவம் தொடர்பாக 7 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர், இதோடு 20 பேர் நிர்வாக தடுப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் பிரான்ஸை விட்டு வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்புள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் Calais-ன் மிகப்பெரிய ஜங்கிள் அகதிகள் முகாம் மூடப்பட்டு அங்கு தங்கிருந்த 7000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து வேறு பகுதியை நோக்கி சென்ற அகதிகள் மீண்டும் அதே இடத்துக்கு வர தொடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Getty Images

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்