பணியில் இருந்த ராணுவ வீராங்கனை மீது தாக்குதல்: மர்ம நபர் கைது

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் பணியில் இருந்த ராணுவ வீராங்கனை மீது தாக்குதல் நடத்திய நபரை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரான்ஸில் உள்ள லியோன் நகரில் ராணுவ பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்று வருகிறது, லியோனிற்கு அருகில் உள்ள Sentinelle என்ற பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

ராணுவ வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்ட நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ராணுவ வீராங்கனை மீது பாய்ந்துள்ளார்.

பெண்ணை தாக்கிய நபர் அவருடைய கழுத்தை நெறித்துள்ளார், நபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த பெண் அவரை வீழ்த்த முயன்று தோல்வியுற்றுள்ளார்.

உடனடியாக தான் ஆபத்தில் உள்ளதாக அவர் குரல் எழுப்பியதும், பிற ராணுவ வீரர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.

வீராங்கனை மீது தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர், நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் 50 வயதானவர் எனவும், சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என உறுதியளித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்