ரயில் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த பெண்: மருத்துவர்கள் நிகழ்த்திய சாதனை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பிரான்ஸ் நாட்டில் ரயில் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் கைகள் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு பிரான்ஸில் உள்ள Chambery ரயில் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

ரயில் நிலையத்திற்கு சென்ற 30 வயதான பெண் ஒருவர் நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே தடுமாறி விழுந்துள்ளார்.

அப்போது, ரயில் சக்கரங்களில் இரண்டு கைகளும் சிக்கி துண்டாகியுள்ளது. இரண்டு பக்க தோள்பட்டையில் இருந்து கைகள் இரண்டும் துண்டாகியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த மருத்துவர்கள் துண்டான இரண்டு கைகளையும் பத்திரமாக சேகரித்துள்ளனர்.

பின்னர், மயக்கத்தில் இருந்த அப்பென் CHU Grenoble Alpes மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திறமைவாய்ந்த மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சையின் மூலம் அவரது இரண்டு கைகளையும் மீண்டும் இணைக்க சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நிகழ்த்தப்பட்ட இந்த முதல் முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுக் குறித்து சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

அப்போது, ‘சிகிச்சை பெற்ற பெண்ணிற்கு இரண்டு கைகளும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இது பிரான்ஸ் மருத்துவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

மேலும், பெண் தன்னுடைய இரண்டு கைகளையும் வழக்கம் போல பயன்படுத்த 18 முதல் 2 ஆண்டுகள் தேவைப்படும்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெட்டப்பட்ட கைகளை மீண்டும் வெற்றிகரமாக இணைக்கும் முதல் சிகிச்சையை கடந்த 2008-ம் ஆண்டு ஜேர்மனி மேற்கொண்டது.

இதன் பிறகு, சீனா மற்றும் இந்தியாவில் இச்சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்