பாரிஸில் பதற்றம்..தீவிரவாத எச்சரிக்கையால் ஈபிள் கோபுரத்தை சுற்றி வளைத்த பொலிசார் சோதனை

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாத எச்சரிக்கை காரணமாக உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை பொலிசார் சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈபிள் கோபுரத்தில் துப்பாக்கி மற்றும் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணமாக பொலிசார், ஈபிள் கோபுரத்திலிருந்து சுற்றுலா பயணிகள் உட்பட மக்களை வெளியேற்றி, அப்பகுதியில் நுழைய தடை விதித்து சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல சுற்றுலா பயணிகள் ஈபிள் கோபுரத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் லிப்ட்டில் சிக்கிக்கொண்டுள்ளனர். மேலும், பொலிசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. சம்பவயிடத்திலிருக்கும் மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் புகைப்படம் மூலம் அப்பகுதயில் பதற்ற நிலை நிலவி வருவது தெரியவருகிறது.

சோதனைக்கு பின் ஈபிள் கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்