1900 ஆண்டிற்கு பின் பிரான்ஸ் வானிலையில் ஏற்பட்ட மாபெரும் மாற்றம்

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில், 1900 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இரண்டாவது அதிகளவான கோடைகால வெப்பம் இவ்வருடம் பதிவாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டின் கோடைகாலமானது 1900 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாவது அதிகளவான வெப்பமானதாக இருந்தது என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமான கோடை கால வெப்பத்தினை விடவும், இவ்வருடம் 1.5 செல்சியஸ் வெப்பம் அதிகளவாக பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இவ்வருடம் வருடாந்த மழை வீழ்ச்சியில் 10 வீதம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு அதிகளவு வெப்பம் கொண்ட கோடை காலமாக அமைந்தது நினைவுக் கூறதக்கது. அப்போது 3.2 செல்சியஸ் வெப்பம் அதிகளவாக பதிவானது.

2003 ஆம் ஆண்டு கோடை காலத்தில் மட்டும் பிரான்சில் 15,000 பேர் உயிரிழந்த குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்