பிரான்சில் இசை நிகழ்ச்சியின்போது மின்னல் தாக்கி விபத்து

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்சில் பிரபலமான இசை நிகழ்ச்சி ஒன்றின்போது மின்னல் தாக்கியதில் 15 பேருக்கும் மேலானோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கிழக்கு பிரான்சில் நேற்று நடைபெற்ற Vieux Canal இசை நிகழ்ச்சியின்போது இச்சம்பவம் நேர்ந்துள்ளது. இதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூதாட்டி ஒருவரும் 44 வயது ஆண் ஒருவரும் கவலைகிடமாக உள்ளதாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் உள்ள பெரிய மரம் ஒன்றில் குறித்த நபர்கள் குழுமியிருந்த நிலையில் மின்னல் தாக்கியுள்ளது. அப்பகுதியில் இவர்கள் குடில் அமைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சம்பவப்பகுதியில் இருந்து அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் சிறுவர்கள் இருவர் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவர்களுக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

மின்னல் தாக்கி விபத்து நேர்ந்ததை அடுத்து குறித்த இசை நிகழ்ச்சியை அமைப்பாளர்கள் ரத்து செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்