சட்டத்தை மீறி அகதிகள் செய்த செயல்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

60 அகதிகள் பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு லொறியில் தப்பி செல்ல முயன்ற நிலையில் அதை தடுத்து நிறுத்த தடியடி நடத்திய பொலிசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸின் Calais நகரிலிருந்த மிக பெரிய அகதிகள் முகாம் கடந்த வருடம் அக்டோபரில் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் வெளியேற்றப்பட்டனர். Calais-லிருந்து பிரித்தானியாவுக்கு செல்வது எளிது என்பதால் சட்டவிரோதமாக அகதிகள் லொறி மூலம் செல்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று Calais சாலையில் பெரியளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை பயன்படுத்திய 60 அகதிகள் நின்று கொண்டிருந்த லொறிகளுக்குள் ஏறி பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அகதிகள் மீது கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.

இந்த தள்ளுமுள்ளில் மூன்று பொலிசாருக்கு காயம் ஏற்பட்டது. அகதிகளுக்கு காயம் ஏற்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.

சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி Jean-Philipp கூறுகையில், பிரித்தானியா காவல்துறை அதிகளவிலான சாலையை திறந்து விடாதது தான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம்.

இதன் காரணமாகவே அகதிகள் வாகனங்களில் ஏறி செல்ல முயன்றனர் என கூறியுள்ளார்.

அகதிகள் அங்கிருந்து ஓடி விட்டதால் பொலிசாரால் அவர்களை கைது செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்