திருமண நிகழ்வில் 9 வயது சிறுமியை கடத்திய நபர் கைது

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் 9 வயது சிறுமியை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள Grenoble என்ற பகுதியில் கடந்த ஆகஸ்ட் 27-ம் திகதி திருமண நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இத்திருமணத்திற்கு நூற்றுக்கணக்கான உறவினர்கள் வந்த நிலையில், 9 வயதான Maelys De Araujo என்ற சிறுமியும் பங்கேற்றுள்ளார்.

ஆனால், திருமணத்திற்கு பின்னர் சிறுமியை பெற்றோர் தேடியபோது அவர் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுக் குறித்து உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து சந்தேகத்திற்குரிய இரண்டு பேரை பொலிசார் கைது செய்தனர்.

ஆனால், இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் குற்றமற்றவர் என தெரியவந்ததால் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருமண நிகழ்விற்கு வந்திருந்த 34 வயதான நபரை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

நபரிடம் விசாரணை செய்தபோது அவர் சிறுமியை கடத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

ஆனால், நபரின் பதில்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்