கார் மீது மோதி 5 கி.மீ இழுத்து செல்லப்பட்ட பெண் பலி

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் வாகன விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் 5 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்டு பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் Brittany மாகாணத்தில் உள்ள Remungol et Moreac என்ற கிராமத்தில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் 30 வயதான பெண் ஒருவர் இரவு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

சாலையில் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

ஆனால் காரின் ஓட்டுனர் பெண் மீது மோதியதை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், காரின் கீழ் சிக்கிய பெண்ணின் உடல் சுமார் 5 கி.மீ தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

பின்னர், காருக்கு கீழ் வினோதமான சத்தம் எழுந்ததால் சந்தேகம் அடைந்த ஓட்டுனர் காரை நிறுத்திவிட்டு கீழே பார்த்துள்ளார்.

அப்போது, காருக்கு கீழ் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

60 வயதான ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது? பெண் மது அருந்தியிருந்தாரா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் பதில் கிடைக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்