பிரெஞ்சு தீவை தாக்கிய இர்மா புயல்: ஆறு பேர் பலி

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள இர்மா புயல் கரீபியன் நாடுகளை தாக்கி வருகிறது.

நேற்று புதன்கிழமை பிரான்சுக்கு சொந்தமான செயிண்ட் மார்ட்டின் தீவுகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

95 சதவீத பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்து விட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

பலத்த காற்றுடன் கடும் மழையும் பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்