பாரீஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பாரீஸில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் வில்லிஜப் பகுதியில் காலியான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.

advertisement

இங்கு குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்காக தயாராக இருந்த சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டுகளை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் குண்டுவெடிப்பில் பயன்படுத்தும் எரிவாயு உருளைகள், மின்கம்பிகள் போன்றவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இது சம்மந்தமாக மூன்று பேரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ஜெரார்ட் கொல்லம்ப் கூறுகையில், இது தீவிரவாத நோக்கத்தோடு செய்யவில்லை என கைதானவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் சிரியாவில் உள்ள நபர்களுடன் போனில் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கைதான மூன்று பேரில் ஒருவர் ஏற்கனவே பொலிசாரின் கண்காணிப்பு பட்டியலில் இருந்துள்ளார்.

வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட இடத்தில் வங்கிகளின் புளூ பிரிண்ட்கள் இருந்ததால், பாரீஸில் உள்ள வங்கியை தகர்க்க அவர்கள் முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்