225 முறை கடித்து குதறிய எலிகள்..இரத்த வெள்ளத்தில் கிடந்த ஊனமுற்ற சிறுமி: மேயருக்கு நெருக்கடி

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்சில் எலிகள் ஊனமுற்ற சிறுமியை 225 முறை கடித்து குதறியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

Roubaix நகரத்தில் வசித்து வரும் 14 வயதான ஊனமுற்ற சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

advertisement

சிறுமி இரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது கூட்டமாக வந்த எலிகள் சிறுமியின் முகம்,கால், கை என உடல் முழுவதும் 225 முறை கடித்து குதறியுள்ளது.

இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் மீதும், Roubaix நகராட்சி மீதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். வீட்டிற்கு அருகிலுள்ள கார் நிறுத்தும் பகுதியில் இருக்கும் குப்பை கூளங்களை அகற்ற அவர் பலமுறை கோரிக்கை விடுத்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக Roubaix நகர மேயரும், வீட்டு உரிமையாளரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்