தேவாலயத்தில் புனித நீருக்கு பதிலாக மதுவை கலந்த மர்ம நபர்கள்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸ் நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயம் ஒன்றில் புனித நீருக்கு பதிலாக மதுவை கலந்த மர்ம நபர்களை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிழக்கு பிரான்ஸில் உள்ள Chateau-Chalon நகரில் உள்ள தேவாலயத்தில் தான் இத்துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement

மிகவும் புகழ்பெற்ற தேவாலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் சென்று தொழுகையில் ஈடுப்படுவது வழக்கம்.

இதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இத்தேவாலயத்திற்கு சென்று வணங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசியாவை சேர்ந்த சுற்றுலா பணிகள் சிலர் இத்தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

தொழுகையை முடித்துக்கொண்டு புனித நீரை அருந்த சென்றபோது அங்கு ஒருவித துர் நாற்றம் எழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுக்குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

பொலிசார் நடத்திய சோதனையில் புனித நீர் வைக்கப்பட்ட் இடத்தில் ஒரு லிற்றர் அளவிற்கு மது கலக்கப்பட்டுருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சில வாலிபர்கள் குறும்பாக இக்காரியத்தை செய்துள்ளனர் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்