பிரிந்து செல்வதாக மிரட்டிய மனைவி: பொலிஸ் அதிகாரி கணவன் எடுத்த முடிவு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வடகிழக்கு பகுதியில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள Noyon ரயில் நிலையம் ஒன்றில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

advertisement

மனைவி மற்றும் தமது இரு குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறித்த விவகாரம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையை அடுத்து பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட நபர் பொலிஸ் அதிகாரி எனவும், தமது மனைவி பிரிந்து செல்வதாக கூறியதை தாங்கமுடியாமல் குறித்த பொலிஸ் அதிகாரி தமது துப்பாக்கியால் மனைவி மற்றும் தமது குழந்தைகளை கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

தானியங்கி துப்பாக்கியால் தமது மனைவி மற்றும் குழந்தைகளை அந்த நபர் சுட்டு வீழ்த்தியுள்ளார். இதில் சம்பவயிடத்திலேயே மூவரும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தாமும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் குடும்ப பிரச்னை காரணமாகவே தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட குடும்பமானது கிரேடர் பாரிஸ் பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தை அடுத்து ரயில் நிலையம் மூடப்பட்டதாகவும், ரயில்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்