உலகின் மோசமான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த பாரீஸ்: எந்த விடயத்தில்?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸும் இணைந்துள்ளது.

ரெண்ட் கேப் என்னும் ஓன்லைன் வலைதள நிறுவனம் $1,500 வாடகைக்கு எவ்வளவு சதுர அடி கொண்ட அடுக்குமாடி வீடுகள் உலகின் முக்கிய நகரங்களில் தரப்படுகிறது என்ற ஆய்வை நடத்தியது.

இதில் பிரான்ஸின் பாரீஸ் நகரம் 25வது இடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 30m² இடம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் கிடைப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் தாராளமான இடம் கிடைக்கும் நகரமாக துருக்கியின் இஸ்தான்புல் முதலிடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 176m² அளவிலான இடம் தரப்படுகிறது.

அதாவது பாரீஸை விட ஐந்து மடங்கு அதிகமாகும், பட்டியலில் இரண்டாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரம் உள்ளது.

மூன்றாமிடத்தில் ஜெர்மனியின் பெர்லின் 139m² அளவிலான இடத்துடன் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தில் பாரீஸை விட மோசமாக சான் பிரான்ஸிஸ்கோ, ஸ்விட்சர்லாந்தின் சூரிச், லண்டன் ஆகிய நகரங்கள் உள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்