பிரான்சில் புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அனுமதி

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

பிரான்சில் புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நாடாளுமன்ற கீழவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிசில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர்.

advertisement

இதனையடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது, இது சுமார் ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருக்கும் இந்த சட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்துள்ளது.

அவசரகால ஏற்பாடுகளின் கீழ் முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த பல நடவடிக்கைகள் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நீதித்துறையின் அனுமதியின்றி சுலபமாக வீடுகளில் சோதனையிடுவது மற்றும் தங்களுடைய சொந்த நகரங்களிலே தனி நபர்களை தடுப்புக்காவலில் வைப்பது ஆகியன இதில் அடங்கும்.

பிரான்ஸில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், மனித உரிமை குழுக்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வருகிற நவம்பர் 1ம் திகதியுடன் அவசரகால நிலை முடிவுக்கு வரும் நிலையில், கீழவையால் ஏற்றக்கொள்ளப்பட்ட மசோதா சட்டமாக இயற்றப்படும் என தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்