மொடல்களின் புகைப்படங்கள் வைத்து மோசடி: பிரான்ஸ் அரசு புதிய தட்டுப்பாடு

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

மொடல்களை வைத்து எடுக்கப்படும் விளம்பர புகைப்படங்களை, மெருகேற்றிக் காட்டுவதற்காக கணினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதை பயன்படுத்தி பலர் நம்பக தன்மையற்ற தவறான விளம்பரங்களை வெளியிட்டு மோசடி செய்து வருகிறார்கள்.

advertisement

உதாரணமாக கூறவேண்டும் எனில், உடற்பருமனாக உள்ள ஒருவரை புகைப்படம் எடுத்து தொழில் நுட்பதை பயன்படுத்தி மாற்றம் செய்து பத்து நாட்களில் இவரது உடல் எடை இந்தளவுக்கு குறைந்துவிட்டது என போலியாக விளம்பரப்படுத்துகின்றனர்.

இதே போன்று பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றது.

இதனால் பிரான்ஸ் அரசு, நாட்டில் வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் எந்தப் புகைப்படத்திலும் அதில் உள்ள மொடல்களை ஒல்லியாகக் காட்டும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றங்களைச் செய்திருந்தால் அப்புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருக்கிறது என சிகரெட் பாக்கெட்டில் உள்ள எச்சரிக்கைகளைப் போல குறிப்பிட வேண்டும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதை மீறுகிறவர்கள் 37,500 யூரோக்கள் அல்லது அந்த விளம்பரத்தை எடுப்பதற்கு செலவிடப்பட்ட தொகையில் 30% அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்