செல்பி மோகத்தால் பறிப்போன உயிர்: பிரான்ஸில் நிகழ்ந்த துயரச் சம்பவம்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் நாட்டில் நபர் ஒருவர் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றபோது கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர் தனது குடும்பத்துடன் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கிழக்கு பிரான்ஸில் உள்ள Montclus என்ற பகுதி மிகவும் பிரபலம் என்பதால் இவர்கள் அனைவரும் அங்கு சென்று இயற்கையை ரசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் மலை உச்சி ஒன்றிற்கு சென்ற அனைவரும் சுற்றி பார்த்து வந்துள்ளனர்.

அப்போது, 48 வயதான நபர் ஒரு குன்றின் உச்சியில் நின்றுக்கொண்டு செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.

துரதிஷ்டவசமாக, கால் இடறி சுமார் 100 அடி உயரத்தில் இருந்து தலைகீழாக விழுந்துள்ளார். நபர் கீழே விழுந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு விரைந்துள்ளனர்.

ஆனால், படுகாயம் ஏற்பட்ட நபர் சம்பவம் இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினர் எதிரே நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்