சிறையில் இருந்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட கைதிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்ட இரண்டு கைதிகள் விடுதலை ஆனதும் பெரிய தாக்குதலை நடத்த வேண்டும் என திட்டமிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள Fresnes சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட இரண்டு கைதிகள் இத்திட்டத்தினை தீட்டியுள்ளனர்.

கமெரூன் நாட்டை சேர்ந்த 28 வயதான நபர் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 22 வயதான நபர் ஆகிய இருவரும் தீவிரவாதத்தில் சேர முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வெளியே சென்றதும் மோசமான தாக்குதலை நடத்த வேண்டும் என இருவரும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பாரீஸில் கடந்த 2015-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் போல மோசமான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என இருவரும் உரையாடி வந்துள்ளனர்.

இத்தகவலை ரகசியமாக அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் இருவரையும் தற்போது வெவ்வேறு சிறைகளில் மாற்றி அடைத்து வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து தற்போது இருவர் மீதும் வழக்கறிஞர்கள் தீவிரவாதி தடுப்பு பிரிவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்