பிரான்ஸில் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Thayalan Thayalan in பிரான்ஸ்
பிரான்ஸில் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரிஸில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

ஒன்பது தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில், சுமார் 5.4 மில்லியன் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பிரான்ஸில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் புதிய சீர்திருத்த நடவடிக்கைகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் புதிய சீர்திருத்த நடவடிக்கையில், எதிர்வரும் 5 வருடங்களில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வேலைவாய்ப்புகளை குறைக்கும் திட்டம், தொழிலாளியின் அடிப்படைச் சம்பளத்தைக் குறைக்கும் திட்டம் உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, புதிய சீர்திருத்தத் திட்டமானது, பொதுச்சேவை ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொதுமக்களின் செலவீனங்களைக் குறைக்கும் வகையிலும், நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையிலும் அழுத்தம் கொடுப்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தொழிலாளர் சீர்திருத்தம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான புதிய முன்மொழிவொன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இதற்கான உடன்படிக்கையிலும் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.

இதற்கு எதிரான கண்டனங்களை தொழிற்சங்கவாதிகளும் மக்களும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்