சிங்க குட்டியுடன் செல்பி: பேஸ்புக்கால் மாட்டிய இளைஞர்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
Seylon Bank Promotion

பிரான்சில் இளைஞர் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மிகுந்த பசியுடன் காணப்பட்ட நிலையில் சிங்கக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பாரிசில் வசிக்கும் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சிங்கக் குட்டியுடன் தான் எடுத்த செல்பி புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது வைரலாகவே பொலிசார் இளைஞர் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.

குறித்த இளைஞரை கண்டுபிடித்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், வடகிழக்கு பிரான்சின் அடுக்குமாடி குடியிருப்பில் சிங்க குட்டியை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக விரைந்த அதிகாரிகள், பசி மயக்க நிலையில் இருந்த சிங்கக்குட்டியை மீட்டனர்.

இளைஞரையும் கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Pompiers de Paris/Facebook

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்