பிரான்சில் தவறுதலாக அனுப்பப்பட்ட SMSனால் வந்த வினை !

Report Print Thayalan Thayalan in பிரான்ஸ்
பிரான்சில் தவறுதலாக அனுப்பப்பட்ட SMSனால் வந்த வினை !
0Shares
0Shares
lankasri.com

பிரான்சில் காவல்துறை புலனாய்வு அதிகாரி ஒருவர் பயங்கரவாத சந்தேக நபர் ஒருவருக்கு தவறுதலாக அனுப்பிய ஒன்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்ற விடயத்தினை தன் சக அதிகாரிக்கு மூலம் அனுப்ப நினைத்த விடயத்தினை தவறுதலாக மற்றுமொரு பயங்கரவாத சந்தேக நபருக்கு அனுப்பிவிட்டுள்ளார்.

கடந்த 7ம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரென்சு ஊடகமொன்றினால் வெளிக்கொணரப்பட்டுள்ள இச்செய்தியினை பிரென்சு உள்துறை அமைச்சும் ஒத்துக்கொண்டுள்ளது.

தவறுதலான இந்நடவடிக்கையினால் பாரதூரமான விடயங்கள் ஏதும் இடம்பெற வாய்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்