இலவசமாக வேலை பார்த்த பிரான்ஸ் பெண்கள்: போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பு

Report Print Deepthi Deepthi in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் பெண்கள் இந்த வருடம் 40 நாட்கள் இலவசமாக வேலை பார்த்துள்ளதாக ஆண் மற்றும் பெண்களுக்கு இடையிலான ஊதியம் இடைவெளி தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட பெண்ணிய அமைப்பான Les Glorieuses தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் ஆண்கள் ஒரு மணி நேரத்திற்கு பெறும் ஊதியத்தை விட பெண்கள் 15.8 வீதம் குறைவாக பெற்றுள்ளனர்.

மொத்தமாக முழு வருடத்துடன் கணக்கிட்டால் பிரான்ஸ் பெண்கள் 39.7 நாட்கள் இலவசமாக தொழில் புரிந்துள்ளனர்.

பெண்கள் அமைப்புகள் ஆண், பெண் சம்பள இடைவெளிக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டு பல போராட்டங்களை நடத்தியிருந்தன.

மக்கள் இப்போது இந்த சமனின்மை குறித்து ஆராய ஆரம்பித்துள்ளதாக தாம் உணர்வதாக லெஸ் குளோரியூசஸ் அமைப்பின் தலைவர் ரெபேக்கா அம்செல்ஹெம் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக இது தொடர்ந்து நடந்து வருவதாகவும் ரெபேக்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வருடம் மேற்கொண்ட பிரசாரம் மற்றும் இந்த வருடம் மேற்கொண்ட வேலை நிறுத்தம் என்பன வெற்றியளித்துள்ளது. மேலும் தமது அமைப்பு சமூக வலைளத்தங்களில் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் அனுப்பிய மனுக்கள் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரெபேக்கா அம்செல்ஹெம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்