கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்: பிரான்ஸ் மக்கள் செய்த நெகிழ்ச்சி அஞ்சலி

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

மர்ம நபர்களால் எரித்து கொல்லப்பட்ட இளம் பெண்ணுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 10,000 பேர் அமைதியான முறையில் சாலையில் அணிவகுப்பு நடத்தியுள்ளார்கள்.

பிரான்ஸின் Gray நகராட்சியை சேர்ந்தவர் அலெக்சியா டேவல் (29) வங்கி ஊழியரான இவர் கடந்த 28-ஆம் திகதி சாலையில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.

இது குறித்து அலெக்சியாவின் கணவர் ஜோனாதன் பொலிசில் புகார் அளித்தார். பொலிசாரின் தேடுதல் வேட்டைக்கு பின்னர் அங்கிருந்த வனப்பகுதியில் இலைகளால் சுற்றியிருந்த நிலையில் அலெக்சியாவின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார் என தெரியவந்தது.

அலெக்சியா பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், உயிரிழந்த அலெக்சியாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 10,000 பேர் சாலையில் அமைதியான முறையில் அணிவகுப்பு நடத்தினார்கள்.

இதில் அலெக்சியாவின் கணவர் உட்பட குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். கூட்டத்தினர் மத்தியில் ஜோனாதன் மற்றும் அவர் குடும்பத்தார் துக்க உரை ஆற்றினார்கள்.

அணிவகுப்பானது வன்முறையால் உயிரிழந்த அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமர்பணம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கபட்டது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்