பிரான்சிற்கு சுற்றுலா வந்த சீனர்களுக்கு ஏற்பட்ட அவலம்

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸில், சீன சுற்றுலா பயணிகளுக்கு கண்ணீர் புகைகுண்டு வீசி பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

தலைநகர் பாரீஸின் புறநகர் பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்த 40 சீன பயணிகளிடம் கண்ணீர் புகைகுண்டு வீசி அவர்களது உடைமைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது.

கடந்த வியாழன்று, இரவு 8.20 மணியளவில் சீன சுற்றுலா பயணிகள் Kyriad ஒட்டலுக்கு வெளிப்புறத்தில் ஷாப்பிங் முடித்துவிட்டு வரும்போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கார் நிறுத்துமிடத்தில் சீன பயணிகள் சென்றபோது, அவர்களை மறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களின் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியுள்ளது. அதன் பின்னர், அவர்களின் எட்டு ஷாப்பிங் பைகள் மற்றும் விலையுயர்ந்த சில பொருட்கள் என அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றது.

அவற்றின் மொத்த மதிப்பு தெரிய வரவில்லை. இது குறித்து ஒட்டல் வேலையாள் ஒருவர் கூறுகையில், அலறல் சத்தம் கேட்டு நான் சன்னல் கதவுகளை திறந்து பார்த்தேன். அப்போது இரண்டு நபர்கள், சீன வழிகாட்டியை தாக்கியும், மற்றவர்கள் சுற்றுலா பயணிகள் மீது கண்ணீர் புகையையும் தெளித்துள்ளனர் என தெரிவித்தார்.

பிரான்ஸ் போன்ற புகழ் பெற்ற நாடுகளில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொள்ளையர்களின் இலக்கே சீன சுற்றுலா பயணிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்