11 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் விடுதலை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் நாட்டில் 11 வயது சிறுமியை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை அந்நாட்டு நீதிமன்றம் நிரபராதி எனக்கூறி விடுதலை செய்துள்ளது.

தலைநகரான பாரீஸிக்கு அருகில் உள்ள Seine-et-Marne நீதிமன்றம் தான் இந்த பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு 11 வயதான சிறுமியும் 22 வயதான வாலிபரும் பாரீஸில் உள்ள பூங்கா ஒன்றில் சந்தித்துள்ளனர்.

அப்போது, இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமி யாரிடமும் கூறாமல் மறைத்து வந்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு பின்னால் சிறுமி கர்ப்பம் அடைந்ததை தொடர்ந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர், நடந்தவை அனைத்தையும் சிறுமி கூறியுள்ளார். மகளை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக பெற்றோர் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. 7 வயதாகும் அந்த குழந்தை தற்போது குழந்தைகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாலிபர் மீதான வழக்கின் இறுதி விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘எனக்கு 14 வயதாகிறது. விரைவில் 15 வயதை அடைந்து விடுவேன்’ என சிறுமி என்னிடம் பொய் கூறினார்.

மேலும், சிறுமியின் அனுமதியுடன் தான் அவருடன் உடலுறவில் ஈடுப்பட்டேன் என வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாலிபரின் வாக்குமூலத்தை ஏற்ற நீதிபதி ‘சிறுமியை கட்டாயப்படுத்தி கற்பழித்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.

மேலும், பிரான்ஸ் நாட்டு சட்டப்படி 15 வயதுடைய சிறுமியுடன் அவரது அனுமதி பெற்று உடலுறவில் ஈடுப்படலாம்.

எனவே, வாலிபர் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்