பிரான்சில் பூனைக்கு வெண்கல சிலை

Report Print Fathima Fathima in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

முதன்முறையாக விண்வெளிக்கு சென்று திரும்பிய பூனை Felicette-க்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது.

கடந்த 1963ம் ஆண்டு அக்டோபர் 18ம் திகதி Felicette, Veronique AG1 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

சுமார் 157 கிலோ மீற்றர்கள் பயணித்த பின்னர், 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

இதன்மூலம் விண்வெளிக்கு சென்று சாதித்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான பணிகளை லண்டனை சேர்ந்த Matthew Serge Guy என்பவர் செய்து வருகிறார்.

இதற்காக இணையதளம் ஒன்றின் மூலம் நிதிகளை திரட்டி வருகிறார்.

இணையத்தில் Felicette பற்றி படித்த போது மெய்சிலிர்த்து போனதாகவும், நாய் மற்றும் சிம்பன்சிகளை பற்றி அறிந்தவர்கள் பூனை விண்வெளி சென்றதை அறிந்திருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்