மனைவி உள்பட 4 பேரை துடிதுடிக்க கொலை செய்த பொலிஸ் அதிகாரி: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

பிரான்சில் மண முறிவு காரணமாக கடும் விரைக்திக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி ஒருவர் மனைவி உள்ளிட்ட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பாரிஸ் நகரின் புறநகர் பகுதியான Sarcelles நகரிலே இந்த கொடூர நரவேட்டை நடந்துள்ளது.

பொலிஸ் அதிகாரியான Arnaud Martin(31) தமது 25 வயது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென்று துப்பாக்கியை நீட்டி தாக்கியுள்ளார்.

இதில் அவர் படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளார், ஆனால் ஆத்திரம் அடங்காத மார்ட்டின், அந்த வழியாக கடந்து சென்ற இருவரை தமது உத்தியோக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இன்னொருவர் தமது பிறந்தநாள் கொண்டாட்டத்தினிடையே சிகரெட் வாங்க குடியிருப்பில் இருந்து வெளியே வந்த 44 வயது நபர் ஒருவரையும் அவர் சுட்டுள்ளார்.

இதில் இருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ஆத்திரம் தீராத மார்ட்டின், குற்றுயிராக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவியை நோக்கி மீண்டும் சுட்டுள்ளார்.

இதனையடுத்து தமது மாமனாரின் வீட்டினுள் புகுந்து அவரை சுட்டுக் கொன்றுள்ளார், மேலும் உறவினர்கள் இருவரையும் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார்.

இறுதியாக தோட்டத்தில் புகுந்த மார்ட்டின், அங்கிருந்த நாயை சுட்டுக் கொன்றதுடன் தாமும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரான்சில் பொலிஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்தவண்னமே உள்ளது, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 46 பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்