போராட்டத்தில் குதித்த 500 பாடசாலை ஆசிரியர்கள்: அரசின் முடிவிற்கு எதிர்ப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

உலகின் பல்வெறு நாடுகளில் இயங்கும் 500 பிரெஞ்சு பாடசாலை ஆசிரியர்கள் அரசின் நிதி குறைப்புக்கு எதிராக திங்களன்று போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.

பிரான்சில் உள்ள SNES-FSU என்ற அமைப்பே குறித்த போராட்டத்தை அறிவித்துள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் வெளிநாட்டில் இயங்கும் பிரெஞ்சு பாடசாலைகளுக்கான நிதியில் சுமார் 33 மில்லியன் யூரோ வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி ஏற்கெனவே ஆள்பற்றாக்குறையால் திண்டாடிவரும் நிலையில் ஆள்குறைப்புக்கும் அரசு திட்டமிடுவதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

உலகில் மொத்தம் 137 நாடுகளில் 492 உயர்நிலை பாடசாலைகளை பிரான்ஸ் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது.

இங்குள்ள 350,000 மாணவர்களில் 40 சதவிகிதம் பேர் வெளிநாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் ஆவர். 60 சதவிகிதம் பேர் வெளிநாட்டவர்கள். இதில் அனைத்து மாணவர்களுக்கும் குறித்த பாடசாலைகளே உணவும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதற்கு வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்