ஆப்பிரிக்காவில் ஒரு பில்லியன் யூரோக்களை முதலீடு செய்யும் பிரான்ஸ்

Report Print Kabilan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

ஆப்பிரிக்காவில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கு, பிரான்ஸ் ஒரு பில்லியன் யூரோக்கள் வரை முதலீடு செய்ய இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

தனது முதல் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், Burkina Faso நாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ள அவர், ஒரு பில்லியன் யூரோக்கள் வரை சிறிய மற்றும் நடுத்தர அளவுகளிலான வியாபாரங்களுக்கு பிரான்ஸ் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த முதலீடு விவசாயத்துக்காக இருக்கும் என கூறிய மேக்ரான், பிரான்ஸின் பொது முதலீட்டு வங்கி இந்த நிதியினை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்பிரிக்காவில் பெருகி வரும் மக்கள்தொகை பெரும் சவாலாக உள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் 450 மில்லியன் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும், இதற்கான சிறு முதலீடாக இது இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை இன்றுடன் முடித்துக் கொண்டு, மேக்ரான் நாடு திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்