உன் நாட்டுக்கே போ! அகதியிடம் நேரடியாக சொன்ன பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து பிரான்ஸுக்கு வந்த அகதியிடம் உன் நாட்டுகே திரும்ப போ என ஜனாதிபதி மேக்ரான் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் உள்ள பொதுமக்களை சந்தித்து உரையாடினார்.

அப்போது வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவிலிருந்து பிரான்ஸில் வந்து தங்கியிருக்கும் பெண்ணுடன் மேக்ரான் பேசினார்.

அவர் கூறுகையில், நீ மொரோக்கோவில் ஆபத்தில் இல்லையெனில் உன் நாட்டுக்கே திரும்பி போக வேண்டும் என்றார்.

அதற்கு, என்னிடம் சரியான விசா இல்லையென்றாலும் நான் பிரான்ஸில் தான் தங்க விரும்புகிறேன் என பெண் அகதி கூறுகிறார்.

பிரான்ஸ் ஆவணங்கள் சரியாக வைத்திருக்காத எல்லோருக்கும் அதை நான் கொடுக்க முடியாது,

இப்படியே போனால் இங்கு வேலையில்லாமல் இருப்பவர்களை எப்படி சமாளிப்பது? என மேக்ரான் கூறினார்.

அதற்கு பதிலளித்த பெண், என் பெற்றோர் பிரான்ஸில் தான் உள்ளனர் என தெரிவித்தார்.

அதற்கு, நீ வேண்டுமானால் உன் பெற்றோரை இங்கு வந்து பார்த்து செல்லலாம் என மேக்ரான் கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்