பாரிஸில் யூத குடும்பத்தை தாக்கிய 5 பேர் மீது நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்
0Shares
0Shares

பிரான்சில் பாரிஸில் யூத குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய 5 நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பிரான்ஸ் உள்விவகாரத்துறை அமைச்சர் Gerard Collomb தெரிவித்துள்ளார்.

சில குற்ற வழக்குகளில் சம்பந்தமுடைய 50 வயது ஆண் ஒருவர், மூன்று இளைஞர்கள் மற்றும் 19 வயது பெண் ஒருவர் என 5 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

அப்பகுதியின் யூதர்கள் சங்க தலைவராக உள்ள ரோஜர் பிண்டோ (வயது 78), மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார், வீட்டை உடைத்து உள்ளே புகுந்த ஐந்து பேரும் மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவர்களின் மத நம்பிக்கை குறித்து விமர்சித்ததுடன், தொடர்ந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசியுள்ளனர்.

இதனைதொடர்ந்து சிசிடிவி கமெரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஒருவரின் தனிப்பட்ட மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக தாக்குதல் நடந்துள்ளதாக Gerard Collomb தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்