பிரபல பாடகர் புற்றுநோயால் பிரான்ஸில் மரணம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

ராப் மற்றும் பாப் இசை பாடகரும், நடிகருமான ஜானி ஹாலிடே புற்றுநோயால் மரணமடைந்து விட்டதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் பிரபல பாடகராகவும். நடிகராகவும் வலம் வந்தவர் ஜானி ஹாலிடே (74). இவர் கடந்த 1950-களில் பாடிய ஒரு பிரஞ்ச் ஆல்பம் நூறு மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகி சாதனை படைத்தது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜானி அதற்காக சிகிச்சை மேற்க்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜானி, நோய் பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக அவரின் மனைவி லைடிசியா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜானி நம்மை பிரிந்து சென்றுவிட்டார். இதை நம்பமுடியாத நிலையில் தான் உங்களிடம் கூறுகிறேன். ஆனால் இது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

ஜானி ஐந்து முறை திருமணமானவர் என்பதும், ஒரே பெண்ணை இரு முறை திருமணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்