புதுவருட கொண்டாட்டத்தில் பொலிசாருக்கு அடி உதை: பிரான்ஸில் பரபரப்பு

Report Print Harishan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் புது வருட கொண்டாட்டங்களின் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் Champigny-sur-Marne மாகாணத்தின் உணவகம் ஒன்றில் கடந்த 31-ஆம் திகதி இரவு புது வருட கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான அனுமதிச் சீட்டுகள் 200 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென குவிந்ததால் கலவரம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிலர் கலவரத்தை தடுக்க முயன்ற போது அவர்களும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

அப்போது கீழே தள்ளிவிடப்பட்ட இரண்டு அதிகாரிகள் மூக்கு உடையும் அளவிற்கு கடுமையாக தாக்கப்பட்டனர்.

இந்த காட்சிகளை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

வைரலான அந்த வீடியோவை பார்த்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்திருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்துள்ள பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்