பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பெயர் தெரிவு செய்யக் கேட்ட இளம் தாயார்: நெஞ்சை உலுக்கும் காரணம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
392Shares
392Shares
lankasrimarket.com

பிரான்சில் இளம் தாயார் ஒருவர் தமது பிறக்கவிருக்கும் குழந்தைக்கு அழகான பெயர் ஒன்றை தெரிவு செய்து தருமாறு சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்தது தற்போது வைரலாகியுள்ளது.

17 வார கர்ப்பிணியான அவர் பிறக்கவிருக்கும் தமது குழந்தை உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்பதால் இப்போதே பெயர் சூட்டி அழகு பார்க்க விரும்புவதாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு தாயாருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வில் சோகமான தகவலை பகிர்வதில் வருத்தம் கொள்வதாக இணையதளம் ஒன்றில் பதிவிட்டுள்ள அவர்,

தற்போது தாம் 17 வார கர்ப்பிணி என்றும் ஆனால் தமது குழந்தை இறந்து பிறக்கவே வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

22 வாரங்கள் அந்த குழந்தையானது தாக்குப்பிடிக்கும் என்றால், அந்த குழந்தையின் பெயரை அரசு ஆவணங்களில் பதிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கணவர் இந்த விவகாரம் தொடர்பில் பேச முன்வராத காரணத்தாலையே தாம் பொதுமக்களிடம் தமது குழந்தைக்கு அழகான பெயர் ஒன்றை தெரிவு செய்ய கோரிக்கை விடுப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிறக்கவிருக்கும் குழந்தை பெண் என்றால் Evangeline, Theodora என பெயர் சூட்ட தாம் விரும்புவதாகவும், ஆண் என்றால் Joseph எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் பொதுமக்களிடம் இருந்து இது தொடர்பில் பெயர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாயாரின் இந்த உருகவைக்கும் பதிவுக்கு பல பெண்களும் ஆறுதல் தெரிவித்து பதிலிட்டுள்ளனர். தற்போது குறித்த தாயாரின் பதிவானது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்