பாரீஸ் நதியில் காணாமல் போன பெண் பொலிஸ் அதிகாரி: தேடும் பணி தீவிரம்

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸில் உள்ள நதியில் காணாமல் போன பெண் பொலிஸ் அதிகாரியை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள Notre Dame cathedral தேவாலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது செய்ன் நதி.

இங்கு சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் குழுவினர் டைவிங் பயிற்சி எடுத்து வந்தனர்.

அப்போது குழுவை சேர்ந்த 27 வயது பெண் பொலிஸ் அதிகாரி தண்ணீரில் காணாமல் போனார்.

தற்போது அங்கு கடுமையான மழை பெய்து வருவதால் நதியில் தண்ணீர் அதிகளவு ஓடுகிறது.

இதையடுத்து 17 நீச்சல் வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உட்பட 100-க்கும் மேற்ப்பட்டோர் பெண் பொலிஸை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகாப்டரும் தேடுதல் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மழை காரணமாக தேடும் பணியில் வெள்ளிக்கிழமை தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை தேடுதல் வேட்டையை அவர்கள் தொடர்ந்தார்கள்.

ஞாயிறும் இதை தொடர உள்ளார்கள். இதனிடையில் தங்களின் சக ஊழியர் காணாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், தேடுதல் பணி நடந்து வருவதாகவும் பொலிசார் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்