சார்லி ஹெப்டோ தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்: ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

Report Print Harishan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸில் நடைபெற்ற சார்லி ஹெப்டோ தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு பிரபல பத்திரிக்கை நிறுவனமான சார்லி ஹெப்டோ ஒரு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் இஸ்லாமிய மத்தை மிகவும் இழிவாக விமர்சனம் செய்யப்பட்டிருப்பதாக கருதிய அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த நிறுவனத்தின் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

பாரிஸில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 12 பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதன் நினைவு நாள் மிக எளிமையாக கொண்டாடப்பட்டுள்ளது.

இறந்த பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் நாட்டின் பல முக்கிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள், பாரிஸ் மேயர் அன் ஹிடால்கோ உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்